தத்துவங்கள், உண்மைகள், தரிசனங்கள் இவற்றின் சுமையிழந்து இப்பெரும் வெளியில் ஒரு சிறகைப்போல் தம் கனவை மௌனமாக விரித்து வைப்பவை கரிகாலன் கவிதைகள். அதிகாரத்தின் சவால்களையும், விடுதலையின் சாத்தியங்களையும் உள்ளுறையாகக் கொண்டு விரிவு கொள்ளும் இவரது கவிதைகள் சொல்லுக்கு மீறிய பொருளையும், புனைவின் பரவசத்தையும் வழங்கக் கூடியவை. நவீன வாழ்வின் நெருக்கடியை, அமைப்பின் வன்முறையை, குழந்தைகள் உலகின் ஃபேண்டசியை, நனவிலி மனதின் பாலியல் சிக்கல்களை குறிப்புகளாகக் கொண்டு நிகழத் தொடங்குகிறது இந்த அபத்தங்களின் சிம்பொனி.
|