• மெல்பகுலாஸோ

  மாதங்கி
  கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள்.
  விலை ரூ.85
 • பாரதிதாசன் யாப்பியல்

  முனைவர் ய. மணிகண்டன்
  இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியாரை அடுத்த பெருங்கவிஞராகத் திகழ்பவர் பாரதிதாசன். கருத்து நிலைகளால் 'புரட்சிக்கவிஞர்' என அழைக்கப்பெறும் அவர் கவிதை வடிவங்களின் யாப்பு வடிவங்களின்& ஆட்சித் திறத்தால் 'பாவேந்தர்' எனப் போற்றப்பெறுகின்றார்.
  விலை ரூ.120
 • தமிழில் பில்கணீயம்
  மணிக்கொடி எழுத்தாளர்கள் - பாரதிதாசன்

  தொகுப்பும் பதிப்பும்: ய. மணிகண்டன்
  எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக,...
  விலை ரூ.80
 • நினைவின் நீரோட்டம்

  கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி
  நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய-ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.
  விலை ரூ.190
 • தமிழ் அகராதிக்கலை

  பேரா. சுந்தர சண்முகனார்
  இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப்-புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.
  விலை ரூ.300
 • தி.க.சி. யின் நாட்குறிப்புகள்

  தொகுப்பு: வே. முத்துக்குமார்
  எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக் கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில்.
  விலை ரூ.125
 • சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து

  ரஃபிக்
  உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாளிணி உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும்...
  விலை ரூ.185
 • அர்த்தமுள்ள அந்தநாள் சமையல்

  டாக்டர் என்.கே. ஷண்முகம்
  ஒவ்வொரு சமையல் குறிப்புக்கும் அறிமுகமாக ஒரு கதையை முன்வைக்கிறார் டாக்டர் என்.கே. ஷண்முகம். இந்த அறிமுகக் கதை இவ்வகை நூல்களிலிருந்து இந்த நூலை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமானதாகவும் காட்டுகிறது.
  விலை ரூ.65
 • எரிவதும் அணைவதும் ஒன்றே

  போகன் சங்கர்
  என்னை மாதிரியே
  இருக்கிறீர்கள் நீங்கள்
  என்னை மாதிரியே
  சிந்திக்கிறீர்கள் நீங்கள்
  விலை ரூ.90
 • தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

  தமிழ் - ஆங்கில அகராதி
  மீள்பதிப்பு: சந்தியா நடராஜன்
  தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் (Johann Philip Fabricius).
  விலை ரூ.900
 • பச்சைக்கிளிகள்

  பாவண்ணன்
  பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது.
  விலை ரூ.160
 • அப்பாவின் தண்டனைகள்

  ம. தவசி
  புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி'...
  விலை ரூ.190
 • சாதனையின் மறுபெயர் சர்.சி.பி.

  ச. இராசமாணிக்கம்
  இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில்...
  விலை ரூ.165
 • கார்காத்தார் இன வரலாறு

  R.S. சுப்பிரமணிய பிள்ளை
  மு. அருணாசலம்
  சிவ. முருகேசன் (மொழிப்பெயர்ப்பாளர்)
  கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடமலையப்பப் பிள்ளை...
  விலை ரூ.175
 • சொல் எனும் தானியம்

  சக்தி ஜோதி
  எத்தனை இடர்பாடுகள் ஏற்படினும் தானே சமன் செய்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையின் அம்சம்தான் பெண் என்பதை அடையாளப்படுத்துபவை சக்தி ஜோதியின் கவிதைகள். அரசியலாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலையும் மனத்தையும்...
  விலை ரூ.100
 • நீதியரசர் மா. மாணிக்கம்

  சிகரம் ச. செந்தில்நாதன்
  நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும்...
  விலை ரூ.150
 • எப்படியும் சொல்லலாம்

  இரா. எட்வின்
  களவு போன
  உண்டியலில்
  வேண்டுதல் சீட்டுகள்
  விலை ரூ.65
 • விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்

  சி. மோகன்
  பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக்கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீர்ந்தவரின் உலகம். நவீன சொல்...
  விலை ரூ.110
 • தரிசனம்

  லா.ச. ராமாமிருதம்
  வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை.
  விலை ரூ.95
 • நவகாளி யாத்திரை

  சாவி
  நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும் பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும், மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே நிர்மாணித்திருக்கிறார்.
  விலை ரூ.55
 • ஆலய பிரவேச உரிமை

  P. சிதம்பரம் பிள்ளை
  தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன்
  ஒவ்வொரு சீர்திருத்தவாதியும், ஏன் ஒவ்வொரு இந்தியனும், தோழர் சிதம்பரம் அவர்கள் எழுதிய இப்புத்தகத்தைப் படிப்பது மட்டுமின்றி ஒரு பிரதியை தமக்கென வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  விலை ரூ.190
 • வீட்டு வைத்தியர்

  டாக்டர் தி.சே.சௌ. ராஜன்
  நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இந்த நூலை அவர் எழுதினார். பல துறைகளில் புகழ்பெற்ற திருச்சி ராஜன் அவர்கள் பெரிய டாக்டர் என்பது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குங் கூடத் தெரியும்.
  விலை ரூ.390

விற்பனையில் சாதனை புரிந்த நூல்கள்